குவைத்தில் தீ விபத்து தமிழர்கள் உட்பட 41 பேர் உயிரிழப்பு வீடியோ இணைப்பு முழு விவரம் Fire in Kuwaiti building
குவைத்தில் தீ விபத்து – தமிழர்கள் உட்பட 41 பேர் உயிரிழப்பு முழு விவரம்
வீடியோ இணைப்பு கீழ் லிங்க்யில்
குவைத்தின் மங்கஃப் பகுதியில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உட்பட 41 பேர் உயிரிழப்பு என தகவல்கள் வெளியாகி உள்ளது
கேரளாவைச் சேர்ந்த கே.ஜி.ஆபிரகாம் என்ற தொழிலதிபருக்குச் சொந்தமான கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெற்கு குவைத்தில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 41 பேர் உயிரிழந்ததாகவும் கட்டடத்தில் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கி பலர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
இதில் குறைந்தது நான்கு இந்தியர்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் இருவர் தமிழகம் மற்றும் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் மலையாள மக்கள் அதிகம் வசிக்கின்றனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் தொழிலாளர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது, மேலும் அங்கு ஏராளமான தொழிலாளர்கள் இருந்தனர்.
குவைத் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது