பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினரில் இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் 64 பேர் சுட்டுக்கொலை
பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினரில் இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் 64 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். எங்கா மாகாணத்தில் நிலப்பிரச்னை காரணமாக பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் எங்கா மாகாணத்தில் நிலப்பிரச்னை காரணமாக நேற்று பழங்குடியினரைச் சேர்ந்த 2 குழுவினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இரு குழுவினரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த பிரச்சனையில் 64 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள், கிராமப்புறங்களில் உடல்கள் சிதறிக் கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காயமடைந்தவர்களில் சிலர் காட்டுக்குள் தப்பிச் சென்றுள்ளனர் எனவும் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பப்புவா நியூ கினியாவில் இருந்து வந்துள்ள இந்த செய்தி மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.